Wednesday, July 1, 2009

13. பெருக்கல் : ஐந்தில் முடியும் மூன்று இலக்க எண்ணை அதே மூன்று இலக்க எண்ணால் பெருக்குதல் (Square)

அதாவது 105, 215, 325, 435, 545, 655, 765, 875, 985 போன்ற எண்களை அதே எண்களால் பெருக்கினால் என்ன விடை வரும். இதற்கு வழக்கமான முறையில் மூளையைக் கசக்காமல், மின்னல் கணிதம் முறையில் பட்டென விடை சொல்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்.

ஆரம்பிக்கும் முன்னால் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக். ஏற்கனவே நாம் இரு இலக்க எண்களை ஸ்கொயர் செய்வது எப்படி என்று பார்த்திருக்கிறோம். எனவே அதை ஒரு முறை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இனி உதாரணத்திற்கு வருவோம்.

உதாரணம் : 1

125
125 X
---------

125 என்பதை இரண்டு தனித் தனி எண்களாக பிரித்துக்கொள்வோம். அதாவது 12 மற்றும் 5 என பிரித்துக் கொள்வோம்.

• முதலில் 5 X 5 = 25 இதுவே விடையின் வலது பாகம்.
• அடுத்ததாக 12 + 1 = 13
• இனி 12 X 13 = 156. இதுவே விடையின் இடது பாகம்.
• ஆக 15625 என்பதுதான் விடை


உதாரணம் : 2

115
115 X
---------


115 என்பதை இரண்டு தனித் தனி எண்களாக பிரித்துக்கொள்வோம். அதாவது 11 மற்றும் 5 என பிரத்துக் கொள்வோம்.

• முதலில் 5 X 5 = 25 இதுவே விடையின் வலது பாகம்.
• அடுத்ததாக 11 + 1 = 12
• இனி 11 X 12 = 132. இதுவே விடையின் இடது பாகம்.
• ஆக 13225 என்பதுதான் விடை


குறிப்பு
நாம் 5ல் முடியும் எண்களை தேர்ந்தெடுத்து பெருக்குவதால் விடையின் கடைசி இரு இலக்கங்கள் எப்போதுமே 25 தான் வரும்.

No comments: