Monday, September 28, 2009

17. மின்னல் பெருக்கல் : மூன்று இலக்க எண்கள்! 100க்கு அருகில் உள்ள இரு எண்களை பெருக்குவது எப்படி? (100ஐ விட சற்று பெரிய எண்கள்)

முந்தைய அத்தியாயத்திலிருந்து ஒரே ஒரு சிறிய மாற்றம்தான். 100ஐ விட சற்று பெரிய எண்கள் என்பதால் இறுதியில் கழிப்பதற்குப் பதிலாக கூட்டப் போகிறோம்.

உதாரணம் : 1

108
107 x
---------
11556
---------

  • அடிப்படை எண் 100
  • 108லிருந்து 100ஐ கழித்தால் 8
  • 107லிருந்து 100ஐ கழித்தால் 7
  • 8ஐயும் 7ஐயும் பெருக்கினால் விடை 8 x 7 = 56.
    இவை வலப்பக்க இலக்கங்கள்.
  • 108டன் 7ஐ கூட்டினால் 108+7 = 115.
    அல்லது 107டன் 8ஐ கூட்டினால் 107+8 = 115.
    இவை இடப்பக்க இலக்கங்கள்.
  • இரண்டையும் ஒன்றாக எழுதினால் 11556.

அதாவது கொஞ்சம் விளக்கமாக எழுதினால்,
115 x 100 (அடிப்படை எண்) + 56 = 11500 +56 = 11556.
இது தான் விடை

உதாரணம் : 2

102
109 x
---------
11118
---------

  • அடிப்படை எண் 100
  • 102லிருந்து 100ஐ கழித்தால் 2
  • 109லிருந்து 100ஐ கழித்தால் 9
  • 2ஐயும் 9ஐயும் பெருக்கினால் விடை 2 x 9 = 18.
    இவை வலப்பக்க இலக்கங்கள்.
  • 102டன் 9ஐ கூட்டினால் 102 + 9 = 111.
    அல்லது 109டன் 2ஐ கூட்டினால் 109+2 = 111.
    இவை இடப்பக்க இலக்கங்கள்.
  • இரண்டையும் ஒன்றாக எழுதினால் 11118.

அதாவது இதையே கொஞ்சம் விளக்கமாக எழுதினால்,
111 x 100 (அடிப்படை எண்) + 18 = 11100 – 18 = 11118.
இது தான் விடை

4 comments:

Suresh Kumar said...

தல மின்னல் பெருக்கல் நல்லா இருக்கு . நான் உங்களை பாலோ பண்ணீட்டேன்

Suresh Kumar said...

Plz remove word verification

புலவன் புலிகேசி said...

நானும் ஒரு கணிதப் பிரியன்தான். உபயோகமான பதிவு. தொடருங்கள் நண்பரே!!!

மங்களூர் சிவா said...

மிக அருமை!